மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
10 முகாம்களில் மக்கள் தஞ்சம்
வடகீழ் பருவமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 55 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 12 ஆயிரத்து 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் தெரிவித்துள்ளார்.744 குடும்பங்களைச் சேர்ந்த 2951 பேர் இடம்பெயர்ந்து கிரான், ஏறாவூர்பற்று, வாகரை மற்றும் ஏறாவூர்நகர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள பத்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். உன்னிச்சை, வாகனேரி, ×கம் ஆகிய குளக்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தினால் 99 வீதிகள், களிமண் குடிசைகள் முழுமையாகச் சேத மடைந்துள்ளதாகவும் 433 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிரான், ஈரளக்குளம், கொம்மாதுரை தீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.வெருகல்துறை ஊடான பாதை தடைப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வாகரை வழியாகத் திருகோணமலைக்கான போக்குவரத்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வாகரை, ஆரையம்பதி, ஏறாவூர்ப் பற்று, பட்டிப்பளை ஆகிய இடங்களிலேயே வீடுகள், குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரசு மற்றும் தொண்டர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உணவு மற்றும் பாவனைப் பொருட்களும் வழங்கப்படுவதாகவும் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் குறிப்பிட்டார்.



7:06 PM
Welcome to Sky network
