பாலமீன்மடுவில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

பாலமீன்மடுவில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியாகியுள்ளார். 65 வயதுடைய மீனவர் பலியானதுடன் மற்றுமிரு மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற மூவரும் படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கியுள்ளனர். மீனவர்களில் அந்தோணி என்ற மீனவரே பலியானவராவார். அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by SKY NETWORK